Sunday, March 17, 2024
மேலும்
  Homeஆன்மிகம்அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

  அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

  தமிழகத்தில் கி.பி 5 மற்றும் 6ஆம் நூற்றாண்டில் பௌத்த மதத்தைப் புறம் தள்ளி சைவம் வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சி சைவ பிரிவைச் சார்ந்த நாயன்மார்களின் பங்களிப்பு என்பது சிறப்புடையதாகும். நாயன்மார்கள் என்ற சொல் தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. சைவத்தில் நாயன்மார்கள் என்போர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தர மூர்த்தி நாயன்மாரின் திருத்தொண்டர் தொகையின் அடிப்படையில், நாயன்மார்கள் அறுபத்து இரண்டு பேர்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

  இதன் பின்னர் சுந்தரரின் பெயர் இணைக்கப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களாகக் கருதப்பட்டனர். கி.பி 1132க்கும் கி.பி 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கனின் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். இப்புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் பதிகங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

  அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் என்பவர் காலத்தால் முந்தைய நாயன்மார் ஆவார். இருப்பினும் அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தர் என்று அழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன்னர் பதினான்கு நாயன்மார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

  சைவ சமயத்தில் பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டன. பார்வதி தேவியிடமிருந்து ஞானப்பால் அருந்தி தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலைப் பாடியவர் திருஞான சம்பந்தர் ஆவார். இவர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் சம காலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

  பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறை எனப்படும் தேவாரம் அப்பர் எனப்படும் திருநாவுக்கரசரால் இயற்றப்பட்டதாகும். இவர் திருஞானசம்பந்தரால் அப்பர் எனப் பெயர் பெற்றார். தர்மசேனர் என்ற இயற்பெயர் பெற்ற இவர் சூலை நோயால் அவதியுற்ற போது தமது சகோதரி திலகவதி சிவனை வழிபட்டதால், நோய் குணமாகியது.

  அதன் தொடர்ச்சியாகச் சிவன் இவரை நாவுக்கரசர் என்று அழைத்து தேவாரம் பாடச் பணித்தாகப் புராணங்களில் காணப்படுகிறது. இவர் பாடிய பதிகத்தால் திருமறைக்காடு என அழைக்கப்படும்.

  கி.பி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அறுபத்து மூவரில் புகழ்பெற்ற நாயன்மார் ஆவார். இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறிப்டும் ஓர் கருவூலம் எனலாம். இவரின் திருமணத்துக்கு சிவன் தூது சென்றார் என்றும். இவர் தம்பிரான் தோழர் என்றும் அழைக்கப்பட்டதாக புராணங்களில் காணப்படுகிறது.

  சுந்தரர் தமது திருவெண்ணை நல்லூர் பதிகத்தில் சிவனை ‘பித்தா” என அழைத்து இறைவனின் நெருக்கத்தைப் பெற்றார் என விளக்கப்பட்டுள்ளது. மேலும், இவரும் கேரள மன்னன் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் செல்ல சிவன் தமது ரிஷப ஊர்தியை அனுப்பியதாகப் புராண நிகழ்வின் பதிவுகளில் காணப்படுகின்றன. மேலும் இந்நிகழ்வு, முதலாம் இராஜராஜனால், தஞ்சை பெருவுடையார் கோயிலில் கருவறையின் உட்புறச்சுவர் பகுதியில் சுவரோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.

  அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?

  சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விவரித்து, சேக்கிழார்  12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார்.

  12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியார்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம்.

  கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை; நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....