Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுடிந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்; சதமடித்த ரவீந்திர ஜடேஜா!

    முடிந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்; சதமடித்த ரவீந்திர ஜடேஜா!

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்-டை  தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் தனது சதத்தைப் பதிவு செய்துள்ளார். 

    இங்கிலாந்தில் உள்ள பிரமிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணி விளையாடி வருகிறது.

    இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்கவீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றாலும், ரிஷ்ப் பண்ட் அற்புதமாக விளையாடி நேற்றைய ஆட்டத்தில் சதமடித்தார். 

    சரிவில் இருந்த இந்திய அணியை  ரிஷ்ப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை மீட்டெடுத்தது. ரிஷ்ப் பண்ட் 146 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 83 ரன்களுடனும், ஷமி ரன்கள் ஏதும் எடுக்காமலும் நேற்றைய ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்குத் தொடங்கியது. நிதானமாக விளையாட ஆரம்பித்த ஜடேஜா 183 பந்துகளில் தனது  சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த இன்னிங்ஸில் சதமடித்த ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே இடது கை வீரர்கள் என்பது குறிப்படத்தக்கது. 

    இதன்மூலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது முறையாக இரண்டு இடது கை வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் சதமடித்துள்ளனர். இதற்கு முன்பு, 1999-ம் ஆண்டு ரமேஷ் மற்றும் கங்குலியும், 2007-ம் ஆண்டு கங்குலி மற்றும் யுவராஜ் சிங்கும் ஒரே இன்னிங்ஸில் சதமடித்த இரு இடதுகை வீரர்களாக உள்ளனர். 

    104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ரவீந்திர ஜடேஜா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்பு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்தனர். 

    இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்துள்ளது. 

    இந்திய ராணுவத்தில் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....