Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்களைகட்டும் பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை

    களைகட்டும் பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை

    உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரை  கோலாகலமாக துவங்கியது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா ஜூலை 1-ம் தேதியான நேற்று தொடங்கியது. இது 42 நாட்கள் நடைபெறும் மிக நீண்ட திருவிழாவாகும்.

    ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் விளங்குகிறது. அதோடு இங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. ரத யாத்திரை திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வார்கள்.

    இந்த கோயிலின் ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். இந்த ரத யாத்திரை திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறும்.

    கோயில் வரலாறு :

    இந்த கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவின் போது பூரி மன்னரின் பரம்பரைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு தேர் வலம் வரும் சுற்றுப் பாதையையும் தெருவையும் சுத்தம் செய்வார்களாம். இந்த தேர் திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தேர்கள் செய்யப்படுகிறது. இதன் காரணம் இதுவரை புலப்படவே இல்லை.பிரபஞ்சத்தின் அதிபதியான ஜெகன்நாதர், கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்காக கோவிலை விட்டு தானே வெளியே வந்து அருள் வழங்குவதாக நம்பப்படுகிறது.

    மற்றொரு புராண நம்பிக்கையின்படி அரசன் இந்திரத்யும்னனின் முன்னாள் ராணியான குண்டிச்சா ராணிக்கு வாக்களித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் ஜெகன்நாதர் வருகை தருவதாக கூறப்படுகிறது. அதனால் ஜெகன்னாதர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 3 கிமீ தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு செல்கின்றனர்.பிறகு, எட்டு நாட்கள் அங்கேயே தங்குவார்கள்.

    இந்த ராத யாத்திரை திருவிழாவின் 4 ம் நாளில் ஜெகன்நாதரின் மனைவியான லட்சுமி தேவி இறைவனை தேடி குண்டிச்சா கோயிலுக்கு வருவதாக நம்பப்படுகிறது. எட்டு நாட்கள் குண்டிச்சா கோயிலில் தங்கிய பிறகு, தெய்வங்கள் ஒன்பதாம் நாளில் தங்கள் வீடான ஜகன்நாதர் கோயிலுக்கு திரும்புகின்றன, இது பஹுதா யாத்ரா என்று அழைக்கப்படுகிறது.

    தேர்களின் வடிவமைப்பு:

    3 தேர்கள் வடிவமைப்பு பணி கடந்த மே 3 ம் தேதி துவங்கி நடைபெற்றது. அதன்படி, ஜகன்னாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஜகந்நாதரின் தேரில் 16 சக்கரங்களும், பாலபத்ரரின் தேரில் 14 சக்கரங்களும், சுபத்திரை தேரில் 12 சக்கரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தேர் திருவிழா நேரம்:

    பஞ்சாங்கத்தின்படி, ஒடிசா, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் அமாவாசைக்கு மறுநாள் அவர்களின் மாதம் தொடங்கும். அதனால், ரத யாத்திரை ஆஷாட மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் தேதியில் தொடங்குகிறது. அதன்படி, இந்த ஆண்டு தேர் திருவிழா ஜூலை 1ம் தேதி காலை 10:49 மணிக்கு தொடங்கி மதியம் 01:09 மணி வரை இருக்கும். அதன் காரணமாக ஜூலை 1ம் தேதியான நேற்று வெள்ளிக்கிழமை சூரியன் உதயத்தின் போது திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஆச்சரியங்கள் நிறைந்த பூரி ஜெகன்னாதர் கோயில்:

    12 வருசத்துக்கு ஒரு முறை நடைபெறும் நவகளேபரா திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய சிலைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுமாம். கோடை காலத்தில் சூரியன் வெயில் சுட்டெரித்தாலும், இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. கோபுரத்தின் நிழலை பார்க்கவே முடியாதம். அதுமட்டுமின்றி, கடற்கரை அருகில் இருக்கும் கோயிலின் உள் சென்றால் கடல் அலை கூட கேட்பதில்லையாம். விஷ்ணு பகவான் காலையில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு மதியம் சாப்பாட்டுக்கு இங்கு வருவதாக ஐதீகம் உள்ளதாம். அதனால் இங்கு விருந்து தடபுடலாக நடக்கும். எவ்வளவு சாப்பாடு செய்தாலும், துளியளவும் வீணாவதில்லையாம்.

    இத்தனை மர்மங்கள் நிறைந்த இந்த ஆலயம், தமிழ் மன்னனான சோழ மன்னரால் கட்டப்பட்டது என்பது கூடுதல் ஆச்சரியம்.மேலும் இந்த திருவிழாவுக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    நீங்கள் மோட்சம் அடைந்துவிட்டீர்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....