Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரைவேக்காட்டு பசங்களுக்கு பதில் சொல்ல முடியாது- முதல்வர்

    அரைவேக்காட்டு பசங்களுக்கு பதில் சொல்ல முடியாது- முதல்வர்

    தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே தனக்கு நேரம் பத்தவில்லை என்றும் இதில் வெட்டிப்புகார்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் இருப்பை காட்டி கொள்ள, என்னை வீண் விமர்சனங்கள் செய்வோரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    கரூரில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து பேசியதாவது:

    குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூரில் அடிக்கல் நாட்டப்படும் புதிய திட்டப்பணிகள் விரைவில் நிறைவுபெறும். அதனை குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்துவோம். ஆட்சிக்கு வந்தால் துறைகளை பற்றி தெரிந்து கொள்ள 6 மாதங்கள் ஆகும்.

    ஆனால், ஆட்சிக்கு வந்த நொடி முதல், ஓய்வு எடுத்து கொள்ளாமல் செயல்படுகிறோம். ஓராண்டு கால ஆட்சி மன நிறைவை தருகிறது. வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. எனவே அரைவேக்காட்டு பசங்களுக்கு பதில் சொல்லவிரும்பவில்லை. மானத்தை பற்றி கவலைப்படாதவர்களுடன் போராட முடியாது. மானத்தை பற்றி கவலைப்படாதவர்கள் வைக்கும் விமர்சனங்களை மதிக்க விரும்பவில்லை. வீண் விமர்சனம் செய்வோர் குறித்து பரிதாபப்படுகிறேன்.

    பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கீழ்நிலை தட்டு மக்கள், விவசாயிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் ஆட்சி பற்றி கேளுங்கள். நான், அனைவரின் கருத்துகளை கேட்டு செயல்படுபவன் . நான் நினைத்தது மட்டும் நடக்க வேண்டும் என நினைப்பவன் அல்ல. நாங்கள் இருக்கிறோம் என காட்டி கொள்ளும் மைக் முன் வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. வீண் விமர்சனங்கள் முன்வைத்து என்னை விமர்சித்து வளர நினைப்பவர்கள் குறித்து பரிதாபப்படுகிறேன்.

    இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    பிரதமரை புறக்கணித்தாரா தெலுங்கானா முதல்வர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....