Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு

    இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு

    கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் ‘காளி’ ஆவணப்படத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. 

    இந்திய ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் ‘காளி’ எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற கனடா திருவிழாவில் திரையிடப்பட்டது. 

    இந்த திரையீடலை அடுத்து, லீனா மணிமேகலை தனது காளி படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அந்த போஸ்டரில், இந்துக்களின் கடவுளான காளி வேடத்துடன் ஒருவர் புகைப் பிடிப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

    காளி ஆவணப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை மீது இதுதொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. நேற்று, ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியது. 

    இந்நிலையில், இந்திய தூதரகம் ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் காளி ஆவணப்படத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

    இதற்கிடையில், “இந்து கடவுள்களை அவமரியாதையாக சித்தரித்ததற்காக” உத்தரபிரதேச காவல்துறை, காளி ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 

    காளி ஆவணப்பட சர்ச்சைக் குறித்து லீனா மணிமேகலை தெரிவித்துள்ளதாவது : “ ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தால் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ‘லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள்’ என்பதற்கு மாற்றாய் ‘லவ் யூ லீனா’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

    காலரா நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – முதல்வர் ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....