Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆஸ்திரேலியாவில் சூறையாடப்பட்ட இந்து கோயில்..

    ஆஸ்திரேலியாவில் சூறையாடப்பட்ட இந்து கோயில்..

    ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் ஒன்று காலிஸ்தான் ஆதரவாளர்களால்  சூறையாடப்பட்டுள்ளது. 

    இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்பை பிரித்து இரு பகுதியையும் இணைத்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்று நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஒன்றாகும். 

    அதேநேரம், ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகளில் இந்த காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சிவா- விஷ்ணு கோயிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

    பொங்கல் திருநாளை முன்னிட்டே, இந்தக் கோயில் சூறையாடப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளதாக ஆஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரத்தில் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சுவாமி நாரயண் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடினர். 

    இச்சம்பவம் தொடர்பாக தற்போது விக்டோரியா மாகாண போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இரட்டை சதம்.. வீணான நியூசிலாந்தின் போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....