Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவாலிபருக்கு லிப்ட் கொடுத்த அரசு அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்..

    வாலிபருக்கு லிப்ட் கொடுத்த அரசு அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்..

    ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு அதிகாரியிடம் பட்டப்பகலில் லிப்ட் கேட்டு காட்டுக்குள் கடத்தி சென்று தாக்கி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    ராமநாதபுரத்தில் உள்ள ஆட்சியார் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி பிரிவில் அதிகாரியாக பணிபுரியும் ஒருவர் கடந்த 14-ம் தேதி காலையில் பேராவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ஈ.சி.ஆர் சாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அங்கு அருகாமையில் இருக்கும் பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார் மேலும் அந்த அதிகாரி தனது இரு சக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்று கொண்டிருக்கும் பொழுது, லிப்ட் கேட்டு ஏறிய அந்த வாலிபர் அந்த அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.

    இதனைதொடர்ந்து தான் சொல்லும் இடத்திற்கு செல்லுமாறும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி புழுதிக்குளம் கண்மாய் பகுதியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த அதிகாரியை கருவேலங்காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று துணிகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததோடு மட்டுமில்லாமல் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    மேலும், அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து `இதுகுறித்து வெளியில் சொன்னாலோ தெரியவந்தாளோ நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம், மீறினால் கொலை கூட செய்து விடுவோம்’ எனவும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கிருந்து படுகாயங்களுடன் தப்பி வந்த அந்த அரசு அதிகாரி, கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி, அங்கு கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயபாலா, நாகாச்சியை சேர்ந்த முனீஸ்குமார், கலைச்செல்வன், முனியசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் மாரீஸ்வரன், பாலேந்திரன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் என்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது .

    பட்டப் பகலில் அரசு அதிகாரியை கடத்தி சென்று பணம் பறித்த இச்சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியையம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    விஜய்யின் அடுத்த படத்தில் குவியும் நடிகர், நடிகைகள் – வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....