Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசிவனுக்கு நண்டு காணிக்கை; பக்தர்களின் விநோத நம்பிக்கை

    சிவனுக்கு நண்டு காணிக்கை; பக்தர்களின் விநோத நம்பிக்கை

    உயிருடன் இருக்கும் நண்டை காணிக்கையாக செலுத்தினால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைந்து விடுவதாக சிவன் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

    இந்து மத வழிபாட்டில் பக்தர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். அவர்களின் வசதிக்கு ஏற்றார்ப் போல் பணமோ, பொருளோ அல்லது சேவையையோ காணிக்கையாக செலுத்துவார்கள். 

    அந்த வகையில், காது தொடர்பான பிரச்சனை இருந்தால் உயிருடன் இருக்கும் நண்டை சிவனுக்கு காணிக்கையாக செலுத்தினால் பிரச்சனை சரியாகிவிடும் என்பதை பக்தர்கள் நம்பிக்கையாக கொண்டுள்ளனர். 

    குஜராத் மாநிலம், சூரத்தில் பகுதியில் அமைந்துள்ள ராம்நாத் ஷிவ் கெலா என்ற சிவன் கோயிலில் இந்த வினோத காணிக்கை செலுத்தும் நம்பிக்கை இருந்து வருகிறது. 

    இங்கு வரும் பக்தர்கள் காது தொடர்பான பிரச்சனைகளுக்கு உயிருடன் இருக்கும் நண்டை சிவனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அத்துடன் இப்படி செல்லுவதின் மூலம் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

     

    இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இரட்டை சதம்.. வீணான நியூசிலாந்தின் போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....