Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இரட்டை சதம்.. வீணான நியூசிலாந்தின் போராட்டம்

    இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இரட்டை சதம்.. வீணான நியூசிலாந்தின் போராட்டம்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 இருபது ஓவர் ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது.

    இதில் ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேற, இதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். ஆனால், வானவேடிக்கையுடன், நிதானமாக விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்கள் கை கொடுக்காத நிலையில், சுப்மன் கில் இந்தியாவின் ஸ்கோரை துரிதப் படுத்தினார். 

    இதன்விளைவாக, இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தார். 

    இதைத்தொடர்ந்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணி சீராக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தன. அந்த அணி சார்பில் ஃபின் ஆலன் 40 ரன்களும், மிச்செல் சான்ட்நர் 57 ரன்களும் விளாசினர். இமாலய இலக்கு என்று கூறினாலும், நியூசிலாந்து அணியின் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்தினார். 

     78 பந்துகளில் 140 ரன்களை விளாசிய பிரேஸ்வெல் கடைசி ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 

    சுபம்ன் கில்

    சுப்மன் கில் 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார். 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த சுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். முன்னதாக, விராட் கோலி, 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்திருந்தார். 

    சுப்மன் கில்லின் இந்த இரட்டை சதத்தின் மூலம், இரட்டை சதத்தை அடித்த 5-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். முன்னதாக சச்சின், சேவாக், ரோஹித், இஷான் கிஷண் ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர்.

    பீடா கடையில் சாக்லேட் போதைப்பொருள்; கையும் களவுமாக சிக்கிய நபர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....