Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்மது குடிப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தேவை!

    மது குடிப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தேவை!

    இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது என்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆனால், மது அருந்திய பிறகு, அடுத்த நாள் காலையில் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள். அடுத்த நாள் காலையில் தலைவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படும். மது அருந்துவதற்கு முன்பாக, அதனால் ஏற்படும் விளைவுகளை குறைக்க, சில உணவுகளை சாப்பிட்டால் போதும். அந்த உணவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

    முட்டை

    முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மது குடிப்பதற்கு முன்பாக முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் வடிவிலோ சாப்பிடலாம். இப்படிச் செய்தவதால் மது அருந்திய பிறகு ஏற்படும் பசியைக் குறைக்க முடியும். மேலும், ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தவும் உதவும்.

    வாழைப்பழம்

    வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது, இரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், மது அருந்துவதால் உண்டாகும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கும்.

    சால்மன்

    சால்மன், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாகும். இதில் புரதம் நிறைந்துள்ளதால், அவை ஆல்கஹால் உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது.

    தயிர்

    தயிரில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகளவு நிறைந்துள்ளது. தயிரில் உள்ள புரதம் ஆல்கஹாலினால் ஏற்படும் விளைவுகளை குறைக்கிறது.

    சியா விதைகள்

    சியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த விதைகளில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம், கேலிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தைத் தடுக்கவும், கல்லீரலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

    அவோகேடா

    அவகோடாவில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமுள்ளதால், செரித்தலை மெதுவாக்குகிறது. இது, ஆல்கஹால் உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக நிறைந்துள்ளது. இது எலக்ட்ரோலைட் அளவை சமன்படுத்த உதவுகின்றது. மேலும், ஆல்கஹால் குடிப்பதற்கு முன்னால், இவற்றை சாப்பிடுவது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை உடைப்பதை மெதுவாக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.

    தக்காளி

    தக்காளியில் உள்ள லைகோபீன், உடலில் உண்டாகும் வீக்கத்தைக் குறைப்பதோடு, உடலில் உள்ள திரவங்களின் சரியான சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. ஹேங்கொவரைத் தடுக்கும் வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஓட்ஸ்

    ஓட்ஸ் நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக அறியப்படுகிறது. இவை இரண்டும் ஒட்டுமொத்த ஆல்கஹால் விளைவுகளை எளிதாக்குகின்றன. ஓட்ஸ் உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

    இனி ஆதார் வீட்டுக்கே வரும்; அடையாள ஆணையத்தின் புதிய யோசனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....