Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனி ஆதார் வீட்டுக்கே வரும்; அடையாள ஆணையத்தின் புதிய யோசனை!

    இனி ஆதார் வீட்டுக்கே வரும்; அடையாள ஆணையத்தின் புதிய யோசனை!

    ஆதார் சேவைகளை வீட்டு வாசலிலேயே வழங்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆயத்தமாகி வருகின்றது. இதற்காக போஸ்ட் பேமென்ட் வங்கியில் பணிபுரியும் 48,000 தபால்காரர்களுக்கு வீட்டு வாசலிலேயே ஆதார் அட்டை தொடர்பான சேவைகளை வழங்க பயிற்சி அளித்து வருகின்றது.

    ஆதார் தொடர்பான சேவை தேவைப்படுவோருக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வீடு வீடாக ஆதார் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது இனிமேல் எந்த அரசு அலுவலகத்திற்கும் செல்லாமல் உங்கள் வீட்டு வாசலில் ஆதார் அட்டை சேவைகளைப் பெற முடியும்.

    எனவே, இப்போது உங்கள் தபால்காரர் உங்கள் வீட்டில் கடிதங்களை கொடுப்பதோடு ஆதார் சேவையையும் வழங்குவார். இதற்காக, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் 48,000 தபால்காரர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) பயிற்சி அளித்து வருகிறது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது, விவரங்களைப் புதுப்பித்தல், குழந்தைகளை ஆதாரில் இணைப்பது போன்ற பயிற்சி அளிக்கப்படும்.

    ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் விவரங்களைப் புதுப்பிக்க தேவையான டிஜிட்டல் கருவிகளை போஸ்ட்மேன்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும்.

    தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொது சேவை மையத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட 13,000 வங்கி நிருபர்களை இத்திட்டத்தில் இணைக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    இந்தியன் போஸ்ட் பேமன்ட் வங்கி ஊழியர்களான தபால்காரர்கள் மற்றும் CSC வங்கி அலுவலர்களால் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய, நாட்டின் 755 மாவட்டங்களில் ஆதார் சேவா கேந்திராவைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​72 நகரங்களில் 88 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சேவா கேந்திராக்கள் ஆதார் எண்ணை இணைப்பது, விவரங்களைப் புதுப்பிப்பது, குழந்தைகளை சேர்ப்பது போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. இது ஆதார் சேவைகளை தொலைதூர மூலைகளையும் சென்றடைவதற்கான ஒரு திட்டம்.

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த சர்ச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....