Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தி ஆஜர்; அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்?

    ராகுல் காந்தி ஆஜர்; அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்?

    அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு எனும் பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.

    அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதிப் பற்றாக்குறையில் தவித்து வந்த நிலையில், அந்நிறுவனத்துக்கு உதவும் வகையில் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 இலட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது. இந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்றது.

    வெறும் ரூ.50 இலட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்டது தான் யங் இந்தியா நிறுவனம். ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பங்குகளை பெற்றுக் கொண்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையில், இந்த பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது என சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

    இதனையடுத்து, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை தொடர்பாக ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தியை கடந்த 2 ஆம் தேதியும், சோனியா காந்தியை கடந்த 8 ஆம் தேதியும் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    நான் வெளிநாட்டில் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கும்படி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, வருகின்ற 13 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

    இதேபோல், கடந்த 8 ஆம் தேதி சோனியா காந்தியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் வழங்கும்படி, சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். இதனால், சோனியா காந்திக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியது.

    இதனிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு வருகின்ற 13 ஆம் தேதி, ராகுல்காந்தி நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், தற்காலிக பொதுச் செயலாளர் சோனியா காந்தியின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராகுல்காந்தி விசாரணைக்காக ஆஜராகும் 13 ஆம் தேதியன்று, நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல், ராகுல் காந்தி ஆஜராகும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி 13 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக சென்று அலுவலகம் முன் சத்தியாகிரக போராட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த சர்ச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....