Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்"இனி இணைய வேகம் இரட்டிப்பாக்கப்படும்" கூகுள் நிறுவனத்தின் புதிய முன்னெடுப்பு!

    “இனி இணைய வேகம் இரட்டிப்பாக்கப்படும்” கூகுள் நிறுவனத்தின் புதிய முன்னெடுப்பு!

    உலகமே இணையத்தினால் இணைக்கப்பட்டுள்ளது. இணையம் அற்ற உலகை இப்போது கற்பனை செய்யவே கடினமாக உள்ளது. ஆனால் இப்போதும் இணைய சேவைகள் இல்லாத நாடுகள் பல இருக்கின்றன. அந்நாடுகளில் இணைய வசதியை ஏற்படுத்தவும், இணைய வேகத்தை அதிகரிக்கவும் கூகுள் நிறுவனம் முயன்று வருகிறது. 

    கூகுள் நிறுவனம் கடல்வழி இணைய கேபிள்கள் மூலம் இணைய வேகத்தை அதிகரித்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இணைய வேகத்தை அதிகரிப்பது என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இச்சமயங்களில், உலகின் பல இடங்களில் இணையத்தேவை அதிகமாக உள்ளது. அந்த இணைய தேவைக்கு ஏற்ப இணைய வேகம் இருக்கிறதா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான்.

    இந்த கேள்விக்குறியை நீக்குவதற்காகத்தான் கூகுள் நிறுவனம் சில முன்னெடுப்புகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இம்முன்னேடுப்பை கூகுள் தனது இணைய கேபிள்கள் உதவியுடன் ஆரம்பிக்க உள்ளது. கூகுள் நிறுவனத்தின் கூறலின்படி, இம்முன்னெடுப்பானது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு அவர்களின் சராசரியான இணைய வேகத்தை எளிதில் இரட்டிப்பாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளது. 

    அதோடு, சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ பகுதிக்கு இணைய கேபிள்கள் வந்தடைந்துள்ளன. இதன்படி, டோகோ பகுதியில் உள்ள எட்டு மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு இணைய வேகத்தை இரட்டிப்பாக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    sub sea cable way

    இணையப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் தற்காலங்களில் இணைய சேவைகள் பெரும்பாலும் முடங்கும் வகையிலும், மெதுவாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு இழுக்காகவும் இருக்கும் நாடுகளுக்கு இம்முன்னெடுப்பு பயனுள்ளதாக இருக்குமென்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு ஜிஎஸ்எம்ஏ எனும் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, சப்- சஹாரா ஆப்பிரிக்கா, உலகின் மிகக் குறைவான இணையதள சேவை கொண்ட பிராந்தியம் என்று தெரிவித்துள்ளது. மேலும், உலகளவில் ஒப்பிடும்போது ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் இன்னும் கால் பகுதியினர் மொபைல் பிராட்பேண்ட் கவரேஜ் வசதியைக்கூட பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகள் இணைய ஊடுருவலில் உலக வங்கியின் உலகளாவிய தரவரிசையில் கீழே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோகோ பகுதியில் இணைய கேபிள்களின் நோக்கம் சரிவர நிறைவு பெற அதீத வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    கூகுள் நிறுவனத்தின் ஆப்பிரிக்க பயிற்சி மற்றும் ஜெனிசிஸ் அனலிட்டிக்ஸ் மதிப்பீட்டின்படி, இந்த கேபிள் 2025 ஆம் ஆண்டளவில் இணைய விலைகளை 14 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை வெற்றியடைந்து நடைமுறைக்கு வந்தால் உலகெங்கிலும் பல பகுதிகள் பாதிப்படையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....