Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரு நாள் வருமானம் ரூ.102 கோடி! சகோதரருக்கே இப்படின்னா அப்ப அதானியோட வருமானம்?

    ஒரு நாள் வருமானம் ரூ.102 கோடி! சகோதரருக்கே இப்படின்னா அப்ப அதானியோட வருமானம்?

    கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தினசரி ரூ.102 கோடி வருவாய் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி. இவருக்கு வயது 60. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் இவர் முக்கியமானவரும், முதன்மையானவரும் ஆவார். மேலும், அதானி உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர். 

    தற்போதைய நிலவரப்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் (ரூ. 12.40 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    இதையும் படிங்க: பணக்காரர் பட்டியலில் மீண்டும் முன்னேறிய அதானி.. இத்தனை கோடி சொத்தா?

    இந்நிலையில், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் சாந்திலால் அதானி அதிக சொத்து மதிப்பைக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியராக உருவெடுத்துள்ளார். வினோத் அதானி தற்போது துபாயில் வசித்து வருகிறார். 

    வினோத் அதானி பல்வேறு நாடுகளில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 28 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குப்படி, இவரின் சொத்து மதிப்பு ரூ.37,400 கோடியை எட்டியுள்ளது.

    சொத்து மதிப்பு அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் வினோத் அதானி இரண்டு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், ஐஐஎஃப்எல் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர் பட்டியலில் 94 வெளிநாடுவாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், வினோத் அதானி தினசரி ரூ.102 கோடி வருவாயை ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....