Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்பணக்காரர் பட்டியலில் மீண்டும் முன்னேறிய அதானி.. இத்தனை கோடி சொத்தா?

    பணக்காரர் பட்டியலில் மீண்டும் முன்னேறிய அதானி.. இத்தனை கோடி சொத்தா?

    உலக பணக்காரர்களின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தார் அதானி.

    அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி. இவருக்கு வயது 60. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் இவர் முக்கியமானவரும், முதன்மையானவரும் ஆவார். மேலும், அதானி உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

    இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு…

    இந்நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின. அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்வி எம் எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் (ரூ. 12.40 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    அதானி கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4-வது பெரிய பணக்காரராக இருந்தார்.

    அதன்பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....