Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு...

    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு…

    உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக பல்வேறு படிப்புகளை பயின்று வந்த இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். மாணவர்கள் உயிர்தப்பினாலும் அவர்களின் கல்விநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

    மேலும், மாணவர்களின் கல்விக் கனவு என்ன ஆவது என்ற கேள்விகள் அப்போது இருந்தே எழுப்பப்பட்டு வந்தது. மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்தியாவில் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தனர். 

    இந்நிலையில், இந்திய பல்கலைகழகத்தில் தொடர வழிவகை செய்யும் முறைக்கு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ‘இனி அரசிடமே கட்டணம் செலுத்த வேண்டும்’ அதிரடி உத்தரவால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் அதிர்ச்சி!

    மேலும், மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவப் படிப்பின் தரத்தினை பாதிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....