Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷின் 'நானே வருவேன்' டீசர் எப்படி இருக்கிறது?

    தனுஷின் ‘நானே வருவேன்’ டீசர் எப்படி இருக்கிறது?

    தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

    இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், நானே வருவேன். இதற்கு முன்பாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்றிய அத்தனை திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல பெயருள்ளது. இந்நிலையில், மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

    நானே வருவேன் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இருந்து யுவன் குரலிலும், செல்வராகவன் வரியிலும் வெளிவந்த ‘வீரா சூரா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், நேற்று (செப்டம்பர்-15) நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இசையும், டீசர் தொகுக்கப்பட்டிருக்கும் விதமும் டீசரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. 

    தனுஷ் இரு வேறு கதாப்பாத்திரங்களில் காட்டும் வேறுபாடும் தோரனையும் பார்ப்போரை மிரளச் செய்கிறது. செல்வராகவன் இயக்கத்தோடு இல்லாமல், நடிகராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். டீசரில் செல்வராகவன் வரும் காட்சிகள் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. கதையை பெறும்பாலும் யூகிக்க முடியாதபடியே டீசர் இருக்கிறது. 

    இருப்பினும், நானே வருவேன் டீசர், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படத்தையும், அஜித்குமாரின் வாலி திரைப்படத்தையும் நியாபகம் செய்வதாக உள்ளது.

    மேலும், இம்மாதம் ‘நானே வருவன்’ திரையரங்குகளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டீசர்; https://www.youtube.com/watch?v=N-WecixCcLE

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....