Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைமுரட்டுத் தனமான மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இரக்ககுணம் பற்றிய கதை !

    முரட்டுத் தனமான மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இரக்ககுணம் பற்றிய கதை !

    எதையும் வெறும் கண்களால் பார்த்துவிட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள், கள்ளுக்குள்ளும் ஈரம் இருக்கும் போன்ற கருத்துகளோடு, மனதில் நீண்ட காரணமில்லா அமைதியையும், திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டே இருக்கும்  பல கேள்விகளையும் விட்டுச் செல்கிறது தி கிரீன் மைல் திரைப்படம். 

    தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் எனும் திரைக்காவியத்தைப் படைத்த பிராங்க் டேரபாண்ட் தான் இந்த படத்திற்கான திரைக்கதையையும் எழுதி இயக்கி உள்ளார். இதன் கதை 1996ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டீபன் கிங் என்பவரின் தி சேம் நேம் என்ற நாவலைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 10ஆம் தேதி, 1999ல் அமெரிக்காவில் வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்துள்ளது.

    தன்னுடைய முதுமையில் தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டிருக்கும் ஒரு ரகசியத்தை, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் தன்னுடைய வயதான தோழியிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் பால் எட்ஜ்கோம்ப். அங்கிருந்து அப்படியே படத்தின் கதை தொடங்குகிறது. 

    கிரீன் மைல்  என்ற மரணதண்டனை கைதிகளுக்கான மரணத்தை நிறைவேற்றும் சிறைச்சாலையில் பணியாற்றி வருகின்றனர் பால் எட்ஜ்கோம்ப், ப்ரூட்டல்  என்று அழைக்கப்படும் ப்ரூட்டஸ் ஹோவெல், டீன் ஸ்டான்டன், பெர்சி வெட்மோர், ஹேரி டெர்வில்லிஜெர் மற்றும் சிறை அதிகாரி ஹல் மூர்ஸ் ஆகியோர். அங்கு அவர்களுடன் மரணதண்டைனைக் கைதிகளாக எட்டர்டு டெலக்ராய்ஸ் மற்றும் ஆர்லன் பிட்டர்பக் ஆகியோர் உள்ளனர்.

    கதையின் நாயகன் பால் எட்ஜ்கோம்ப் கடுமையான சிறுநீர்ப்பாதை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் கொடுமையைத் தாங்கிக்கொண்டே கைதிகளை மின்சாரம் பாய்ச்சி கொள்ளும் முறைகளை கவனித்து வருகிறார் பால் எட்ஜ்கோம்ப். இந்நிலையில் வந்து சேர்கிறார் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மரணதண்டனை பெற்ற கைதி ஜான் கோஃபே. 

    பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமான இருக்கும் அவரது உடலமைப்பைக்  கண்டு தொடக்கத்தில் அனைவரும் பயப்பட ஜான் கோஃபேவோ அனைவரிடமும் மிகப்பணிவாக நடந்து கொள்கிறார். அதே சிறைக்கு வந்து சேர்கிறார் மற்றொரு சிறைத்தண்டனைக் கைதியான வைல்டு பில்.

    நாளடைவில் ஜான் கோஃபேவுக்குள் ஒருவித மந்திரசக்தி இருப்பதை கண்டறிகிறார் பால் எட்ஜ்கோம்ப். அதன்பின் நடக்கும் சம்பவங்களும் சில மரணங்களும் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் படத்தைப் போலவே இந்த படத்திலும் சிறைச்சாலைகள் மீதான பொதுப்பார்வைகளை உடைத்தெறிகிறார் இயக்குநர். 

    கதையில் முக்கிய காதாபாத்திரமாக மிஸ்டர் ஜிங்கிள்ஸ் என்ற எலி உள்ளது. ஒரு எலியை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து கதையை நகர்த்தியதில் தான் திரைக்கதையின் சாமர்த்தியம் உள்ளது.

    இத்திரைப்படம் வெளியான வருடத்தில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த துணைநடிகர் மட்டுமல்லாமல் சிறந்த திரைக்கதைக்காகவும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஜான் கோஃபேவாக நடித்த மைக்கேல் கிளார்க் டங்கன் அனைவரின் உள்ளத்தையும் உருக்கும்படி அந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போயிருப்பார். 

    கதையும் கதை சார்ந்த விஷயங்களும் ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருவதால் தி கிரீன் மைல் திரைப்படம் ப்ரிசன் ட்ராமாக்கள் வரிசையில் உச்சம் தான் !

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....