Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையில் கனடா : “அகதிகள் ஆயினும் உறவுகளே” நெகிழ்ச்சியான தருணங்கள்

    36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையில் கனடா : “அகதிகள் ஆயினும் உறவுகளே” நெகிழ்ச்சியான தருணங்கள்

    36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று கனடா கால்பந்து அணி சாதனை படைத்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கனட நாட்டினர் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான அந்த அணியில் 8 பேர் வெளிநாடுகளை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜமைக்கா நாட்டிற்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கோல்கணக்கில் கனடா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கத்தாரில் நடக்க இருக்கும் 2022 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே 36 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

    அந்த அணியின் தாக்குதல் தொடுக்கும் ஆட்டநிலையான விங்கில் விளையாடுபவர் 1999ஆம் ஆண்டு லைபீரியாவில் நடந்த போரில் தப்பியோடிய பெற்றோர்களுக்கு கானாவில் உள்ள புடுபுரம் அகதிகள் முகாமில் பிறந்தவர். 

    தன்னுடைய ஏழு வயதில் குரோஷியாவில் நடந்த போரில் தப்பித்து வந்தவர் தான் அந்த அணியின் கோல்கீப்பர். அந்த அணியின் முன்கள ஆட்டக்காரர் அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் பிறந்து ஹைதி நாட்டில் உள்ள போர்ட்-ஓ-பிரின்ஸ்ல் வளர்ந்தவர். பின்களத்தில் இடது ஸ்ட்ரைக்கர் ஆக இருப்பவர் இங்கிலாந்தில் உள்ள நைஜீரிய குடும்பத்தில் பிறந்தவர். 

    இப்படியாக அந்த அணியில் உள்ள எட்டு பேர் பிற நாடுகளை தாயகமாக கொண்டவர்கள். அல்போன்சோ டேவிஸ், மிலன் போர்ஜன், ஜோனதன் டேவிட் மற்றும் ஜகே உக்போ ஆகியோரின் பங்களிப்பு இல்லாமல் அந்த அணி இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கவே முடியாது. 

    இது குறித்து பேசியுள்ள அந்நாட்டு அணியின் முன்னாள் ஸ்கோரர் டுவைன் டி ரோசரியோ என்னுடைய குடும்பம் வாய்ப்பு தேடி கனடாவுக்கு வந்தது. நான் இங்கிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். அதேபோல், அல்போன்சோ  டேவிஸின் குடும்பமும் மிகவும் கடினமான சூழ்நிலையில் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி கனடாவுக்கு வாய்ப்பு தேடி வந்தது. அல்போன்சோ டேவிஸ் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுதான் விளையாட்டின் அழகு என குறிப்பிட்டுள்ளார். 

    இவர்கள் மட்டுமல்ல, கனடாவின் பயிற்சியாளர் தகுதிச்சுற்றுக்கான அணியை அறிவித்தபோது அதில் இருந்தவர்களில் 8 பேர் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் தான். சார்லஸ் ஆண்ட்ரியாஸ் ப்ரைம் பிரான்சில் பிறந்தவர். ஜெய்சன் லுட்விலர் ஸ்விட்சர்லாந்தில் பிறந்தவர். டேவிட் வோதர்ஸ்பூன் ஸ்காட்லாந்த்து நாட்டில் பிறந்தவர். அந்த அணியின் அதிரடி ஆட்டகாரரான சைல் லாரின் ஜமைக்காவை பூர்விகமாக கொண்டவர். 

    இப்படியாகத் தங்களுக்குள் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அணிக்காக ஒன்றிணைத்தவர்கள், சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட கனடாவுக்காக புது சரித்திரத்தை படைத்துள்ளார்கள். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....