Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல், டீசல் விலை உயர்வும் எலக்ட்ரிக் பைக் தீ பிடிக்கும் சம்பவங்களும்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வும் எலக்ட்ரிக் பைக் தீ பிடிக்கும் சம்பவங்களும்

    நான்கு மாதங்களுக்கு பிறகு கடந்த எட்டு நாட்களில் ஏழுமுறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் 4 ரூபாய் 54 காசுகள் அதிகரித்து 105 ரூபாய் 97 காசுகளும் டீசல் விலை 4.57 காசுகள் அதிகரித்து 96 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாத பொது மக்கள் பலர் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கூடி வருகிறது. 

    இதனைக் கட்டுப்படுத்த எலக்ட்ரிக் பைக்குகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில இடங்களில் எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென வெடித்து வருகிறது. இதற்கு காரணமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சார்ஜ் செய்யும் பேட்டரி சூடு அதிகமாகி விதிக்கிறது என்கின்றனர் ஆய்வு நிபுணர்கள். 

    ஆட்டோ மொபைல் என்ஜினீயர்கள் கூறும் போது எலக்ட்ரிக் பைக்குகள் அதிக நேரம் சார்ஜ் செய்யப்படுவதால் தான் அதிகம் சூடாகி வெடிக்கிறது என்கின்றனர். மேலும் இரவில் அதிக நேரம் சார்ஜ் செய்து அப்படியே வைத்து இருப்பதாலும் மின்சாரம் மாறிய அளவில் வருவதாலும் இம்மாதிரியான விபத்துகள் நிகழ்கின்றன என்றும் கூறுகின்றனர்.  நாம் மொபைல் போன்களுக்கு இரவு முழுவதும் சார்ஜ் செய்வதைப் போல் எலக்ட்ரிக் பைக்குகளை சார்ஜ் செய்யக் கூடாது என்கின்றனர். 

    வேலூரில் தந்தை மகள் இரவு எலக்ட்ரிக் பைக்கு சார்ஜ் செய்துவிட்டு தூங்க சென்றுள்ளனர். அதிகாலையில் எலக்ட்ரிக் பைக் வெடித்து அதனால் உருவான கரும் நச்சுப்புகையின் காரணமாக தந்தை மகள் இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முருகேசன் என்பவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக எலக்ட்ரிக் மூலம் இயங்கும் பைக்கை வாங்கியுள்ளார். மேலும் அவர் வெளிநாடு செல்வதால் நண்பர் பாலுவிற்கு  எலக்ட்ரிக் பைக்கை தந்துவிட்டு சென்றிருக்கிறார். பாலு தன் கடை முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தி இருக்கிறார் அப்போது திடீரென புகைச்சல் வந்ததை பார்த்த அவர் சிறிது நேரத்திலேயே தீ பற்றி நன்றாக எறிந்துள்ளது. பிறகு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தீயை தண்ணீர் வாரி இரைத்து அணைத்துள்ளார். 

    மேலும் இதே போல் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருக்கிறார் அதிகாலையில் தீ பற்றி எலக்ட்ரிக் பைக்குடன் சேர்ந்து அருகில் நின்றுக் கொண்டிருந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. இந்த எலெட்ரிக் பைக்கை அவர்  7 மாதங்களாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயினை அணைத்துள்ளனர். 

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் செய்வது அறியாது இது மாதிரியான எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறும் நிலையில், எலக்ட்ரிக் பைக்குகள் வெடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....