Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்விளையாட்டு15வது ஐபிஎல் தொடரில் இதுவரை மோதாத இரு அணிகள் இன்று மோதவுள்ளன; கேப்டன் சொன்னது இதுதான்!

  15வது ஐபிஎல் தொடரில் இதுவரை மோதாத இரு அணிகள் இன்று மோதவுள்ளன; கேப்டன் சொன்னது இதுதான்!

  ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ரசிகர்களிடத்தில் பற்ற வைத்திருக்கிறது, 15வது ஐபிஎல். காரணம் என்னவென்று நோக்கினால், எதிர்ப்பார்த்த அணிகளின் தோல்விதான் என்ற பதில் கிடைக்கிறது. வெற்றிப்பெறுவர் அல்லது பலம் வாய்ந்த அணி என்று கூறப்பட்ட அணிகள் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

  15வது ஐபிஎல் தொடரில் இன்னமும் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள்தான் தங்களின் விளையாட்டு கணக்கைத் தொடங்காமல் உள்ளன. இந்நிலையில், இன்று அந்த இரு அணிகளும் நேருக்கு நேர் போட்டியிட இருக்கின்றன.

  கேன் வில்லியம்சன் தலைமையில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று களம் இறங்க உள்ளது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் இருக்கிறது. மேலும், அயல்நாட்டு வீரராக இருந்தாலும் கேன் வில்லியம்சனுக்கு ரசிகர்கள் பலர் இந்தியாவில் உள்ளனர். சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் பயணத்தில் அடுத்தக் கட்டத்தை எட்டிவிட வேண்டும் என்று எண்ணுபவர்களும் இங்கு ஏராளம்.

  இரு அணிகளுமே இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயுத்தமாகி வருகின்றன. சஞ்சு சாம்சன் சமீபத்தில் ” இந்த வடிவ கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அச்சமற்ற மனநிலையுடன் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இந்த வருடம் அச்சமற்ற  மனநிலையுடன் விளையாடக் கூடிய வீரர்கள் இங்கு உள்ளனர். எனவே நாங்கள் அந்த மனநிலையை மைதானத்தில் சென்று வெளிப்படுத்த விரும்புகிறோம்.” என்று கூறியுள்ளது ராஜஸ்தான் அணி ரசிகர்களுக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது. 

  இன்று இரவு 7:30 மணிக்கு புனேவில் உள்ள மஹாராஷ்டிரா  கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இந்த 15 வது ஐபிஎல் தொடரில் ஐந்தாவது போட்டி நடைபெற இருக்கிறது. 

  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கே), நிக்கோலஸ் பூரன்(வி), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், உம்ரான் மாலிக், மார்கோ ஜான்சன், ரவிக்குமார் சமர்த், ஸ்ரேயா கோபால், ஜெகதீஷா சுசித், க்ளென் பிலிப்ஸ், ஷஷாங்க் சிங், விஷ்ணு வினோத், பிரியம் கார்க், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, சவுரப் துபே
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தட் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கே\வி), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, கே.சி கரியப்பா, கே.சி கரியப்பா, -நைல், கருண் நாயர், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேரில் மிட்செல், ஓபேட் மெக்காய், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், அனுனய் சிங், குல்தீப் சென், துருவ் ஜூரல், ஷுபம் கர்வால். 
  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....