Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'என்னை கொலை செய்ய முயலும் நான்கு பேர்'-உயிர் தப்பிய இம்ரான் கான் சொன்ன பகீர் தகவல்

    ‘என்னை கொலை செய்ய முயலும் நான்கு பேர்’-உயிர் தப்பிய இம்ரான் கான் சொன்ன பகீர் தகவல்

    ‘எனக்கு ஏதாவது நடத்தால் நான்கு பேர்தான் காரணம்’ என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். 

    பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பேரணியில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

    காலில் குண்டுகள் பாய்ந்ததால் பலத்த காயமடைந்த இம்ரான் கான், மருத்துமவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

    நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டு கால்களுக்கு கட்டுகள் போடப்பட்டுள்ள நிலையில், தனக்கு நடந்த தாக்குதல் குறித்து அவர் நேற்று பேசியுள்ளார். 

    இம்ரான் கான் பேசியதாவது: அன்றைய தினம் நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தேன். இரண்டு பேர் என்னைச் சுட்டார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து சுட்டிருந்தால், நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். மொத்தம் என்னை நான்கு தோட்டாக்கள் தாக்கின.

    தாக்குதலுக்கு முந்தைய நாள், வஜிராபாத்திலோ அல்லது குஜராத்திலோ என்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்பதை நான் அறிந்துகொண்டேன். முதலில் நான் மதத்தை அவமதித்தேன் என்று என்னை குறிவைத்து வதந்தி பரப்பப்பட்டது.தற்போது, ஒரு மத தீவிரவாதி என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளான். 

    இவற்றையெல்லாம் யார் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான்கு பேர் என்னைக் கொல்ல சதி செய்தார்கள். அவர்கள் யார் என்பது தொடர்பாக என்னிடம் ஒரு வீடியோ இருக்கிறது. எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது வெளியிடப்படும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மகள் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் – வெளிவந்த அதிரடி அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....