Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

    டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

    ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. 

    இருபது ஓவர் உலக கோப்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சரிவர விளையாடத ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மென்கள் ரன்கள் சேர்ப்பதில் வேகமெடுக்க தவறினர். வேகமெடுத்தாலும் விக்கெட்டுகள் சரிந்து விடுகின்றன. 

    இருப்பினும், மெக்ஸ்வெல் அரைசதத்தாலும், மார்ஸ் அடித்த 45 ரன்களினாலும் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சிறப்பாக பந்துவீசியது என்றே கூறலாம். 

    இதைத்தொடர்ந்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மென்கள் 30,39,26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ரஷித்கான் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்தார்.

    இதையும் படிங்க: கண்டன ஆர்ப்பாட்டம்: புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்…

    12 பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆப்கானிஸ்தான் வந்தது. அப்போது, 19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் ரஷித்கான் ஒரு சிக்‌ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 10 ரன்கள் சேர்த்தார். இதைத்தொடர்ந்து, கடைசி ஓவரில் 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது. ரஷித்கான் வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்க ஆஸ்திரேலியா சற்றே பயத்தில் இருந்தது. வைட் காரணமாக ஒரு ரன் வர ஆப்கானிஸ்தானுக்கு 6 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

    ஒரு பந்திற்கு பின்னர் ஒரு பவுண்டரி 4 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க வேண்டும். அடுத்த பந்து டாட் ஆனது. அதற்கடுத்து போடப்பட்ட பந்து சிக்ஸருக்கு சென்றது. இந்த சிக்ஸரால் ஆஸ்திரேலிய அணியினர் மட்டுமல்லாமல், ரசிகர்களும் பதட்டத்தின் உச்சிக்கு சென்றனர். அடுத்த இரு பந்துகளுக்கு 11 ரன்கள் தேவைப்பட ஆப்கானிஸ்தான் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இறுதிக்கட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. 

    இதையும் படிங்க: ‘வலிமையானவன் மட்டுமல்ல பலவீனமானவனும் கூட’- உறக்கச்சொன்ன விராட்கோலி..,பர்த்டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....