Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காரோடு மூழ்கடித்து 'துடிக்க துடிக்க கொலையா' ? பாஜக MLA-வின் தம்பி மகன் சடலமாக மீட்பு

    காரோடு மூழ்கடித்து ‘துடிக்க துடிக்க கொலையா’ ? பாஜக MLA-வின் தம்பி மகன் சடலமாக மீட்பு

    காணாமல் சென்றதாக சொல்லப்பட்ட கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் மகன் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கர்நாடக மாநிலம், தவணகெரே மாவட்டம், ஒன்னாளி தொகுதியின் பாஜக  சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ரேணுகாச்சார்யா. இவர் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இவரது சகோதரர் மகன் சந்திரசேகர் கடந்த மாதம் 30 ஆம் தேதி காலை காரில் தனியாக வெளியே சென்றார். 

    அன்று சென்ற சந்திரசேகர் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. வீட்டிற்கு வராத காரணத்தால், குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். சந்திரசேகர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் ஒன்னாளி காவல்துறையில் புகார் அளித்தனர். 

    இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து காணாமல் சென்ற சந்திரசேகரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

    இந்நிலையில், ஒன்னாளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சந்திரசேகரின் கார் தென்பட்டது. இதையடுத்து காரில் உயிரிழந்த நிலையில் சந்திரசேகரின் உடலை காவல்துறையினர் மீட்டனர். 

    இதன்பிறகு, சந்திரசேகரின் உடல் பிரதேச பரிசோதனைக்காக தாவங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக, கர்நாடக முதலவர் பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், முன்னதாகவே எஸ்பி விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ‘வலிமையானவன் மட்டுமல்ல பலவீனமானவனும் கூட’- உறக்கச்சொன்ன விராட்கோலி..,பர்த்டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....