Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்கு செல்லுமா இந்திய அணி?

    டி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்கு செல்லுமா இந்திய அணி?

    இந்த உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதி செல்வதற்கான வாய்ப்புகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம். 

    ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் 2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவில் யார் அரையிறுதிக்குச் செல்லப்போகிறார்கள் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. ஆதலால், இனி நடைபெறும் ஓவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பான பாணியில்தான் இருக்கும். 

    நேற்று தென்னாப்பிரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் வென்றதன் மூலம், குருப் 2 பிரிவில் பலப்பரிட்சை அதிகமாகியுள்ளன. தற்போது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள்  4 புள்ளிகளுடனும், தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடனும், இந்தியா 6 புள்ளிகளுடனும் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை நோக்கியபடி இருக்கின்றன. 

    அனைத்து அணிகளுக்கும் இன்னும் மீதம் ஒரு போட்டியுள்ளது. இப்போட்டிகள்தான் யார் அரையிறுதிக்குள் செல்ல முடியும் என்தபதை தீர்மானம் செய்யப்போகிறது. பாகிஸ்தானும் வங்கதேச அணியும் ஒன்றோடு ஒன்று அடுத்தப் போட்டிகளில் மோதிக்கொள்ளவுள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி 6 புள்ளிகளை பெற்றுவிடும். இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் ரன்ரேட்டில் இந்த இரு அணிகளை விட இந்திய அணி முன்னிலையில் இருந்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். 

    அப்படியில்லையென்றால், இந்தியா, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணியுடன் மோதும் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெறாமல் தோல்வி பெறுமாயின் அப்போதும் அரையிறுதி வாய்ப்பு குறையும். 

    தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரையில், 5 புள்ளிகளுடன் உள்ளதால் அடுத்து அந்த அணி மோதப்போகும் நெதர்லாந்து அணியுடன் வெற்றிபெற்றாக வேண்டும்.

    இதையும் படிங்க: வில்லனாக புதிய பரிமாணத்தில் வைகை புயல் வடிவேலு; யாருக்காக தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....