Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மகள் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் - வெளிவந்த அதிரடி அப்டேட்!

    மகள் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் – வெளிவந்த அதிரடி அப்டேட்!

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கிய பின்னர் சிறிது காலம் திரைப்படங்கள் ஏதும் இயக்காமல் இருந்தார். பல வருடங்கள் கழித்து சமீபத்தில் இவர் இயக்கிய பாடல் காணொளியான ‘பயணி’ இணையதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகின. அவர் கைவசம் பல கதையும் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் இதுவரை எதுவும் வெளியாகாமல் இருந்தது.

    மேலும், நடிகர் சிம்புவிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை ஒன்றை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின, இந்நிலையில், திடீரென ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    அதன்படி, லால் சலாம் என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 

    முக்கிய கதாப்பாத்திரத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஏ. ஆர்.ரகுமான் இசையில் உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கண்டன ஆர்ப்பாட்டம்: புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....