Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உத்தமவேடதாரி அமைச்சர் ஊருக்கு உபதேசம் செய்யலாமா? - கடுமையாக சாடிய பாஜக

    உத்தமவேடதாரி அமைச்சர் ஊருக்கு உபதேசம் செய்யலாமா? – கடுமையாக சாடிய பாஜக

    மனோ தங்கராஜை, தண்டித்திருக்க வேண்டிய திமுக அரசு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது என பாஜக சாடியுள்ளது. 

    திமுக அமைச்சர் மனோதங்கராஜ் குறித்து பாஜக மகளிர் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உத்தமவேடதாரி மனோதங்கராஜ் ஊருக்கு உபதேசம் செய்யலாமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

    மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

    பாஜகவுக்கு பெண்கள் பற்றி பேச என்ன தகுதி என்று கேட்டிருக்கும் திரு.மனோ தங்கராஜ் அவர்கள் பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பது கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தெரிந்த செய்தி, சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரிலே, அமைச்சர் மனோ தங்கராஜிடம், உதவி கேட்டு வந்த இளம் விதவைப் பெண்ணை, தன் சாகசவலையில் வீழ்த்த நினைத்த சம்பவத்தின் ஆதாரங்கள் எல்லாம் வலைதளங்களில் இன்னும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. 

    பெண்மையை கேவலப்படுத்திய சட்ட மன்ற உறுப்பினரை, உதவி கேட்ட பெண்ணை உறவுக்கு அழைத்த மனோ தங்கராஜை, தண்டித்திருக்க வேண்டிய திமுக அரசு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது.

    இன்னும் சொல்லப்போனால் 2021 ஆம் ஆண்டு இவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தி பல பெண்களும், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தியதை தமிழகம் மறந்து இருக்க முடியாது?.

    இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்திட்டம்; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

    பெண்களுக்காக போராட்டம் நடத்தும் தகுதி, பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்று, திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தன் அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். 

    தன் அறிக்கை மூலம், பெண்களை இழிவு செய்த சாதிக்கின் செயலை, அமைச்சர் நியாயப்படுத்துகிறாரா? தன்னைப்போலவே மகளிரை இழிவு செய்த நபரை வரவேற்கிறாரா? என்ன செய்வது? இனம் இனத்தோடுதானே சேரும்..? கர்மவீர வாழ்ந்த மண்ணில் காமவீர்கள் கூட்டாக களம் காண்கிறார்கள். கன்யாகுமரி மாவட்டத்தின் கரும் புள்ளியாகத் திகழும், மனோ தங்கைய்யா, மகளிருக்காகப் பேசுவது, ஒநாய் அழுகையைப் போன்றது என்று இம்மாவட்ட மகளிர் அறிவார்கள்.

    தவறு செய்பவர்களைவிட, அதற்குத் துணை நிற்பவர்களை, அதிகம் தண்டிக்க வேண்டும். என்ன துணிச்சல் இருந்தால், சாதிக் போன்ற நபர் தமிழ்ச் சமூகத்தில் உயர் மதிப்பில் பொற்றப்படும் பெண்களை, கேவலப்படுத்துவா… அந்த அவலத்திற்கு தங்கராஜ் போன்ற அமைச்சர்கள் துணை நிற்பார்கள்…இதைக் கண்டிக்க வேண்டிய கட்சித்தலைவரே, ஆட்சித்தலைமையில் இருக்கும் போது கூடுதல் பொறுப்புடன் நடவடிக்கை எடுப்பாரா அல்லது கண்டும் காணாததும் போல் இருப்பாரா?

    பெண்களை தரக்குறைவாக கண்ணியமற்ற வகையிலே சொல்லத் தகாத வார்த்தைகளால், திமுகவின் பொது கூட்டத்தில் சாதிக் என்பவர் கேவலமாக விமர்சிக்கிறார். பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலே பேசும் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் அச்சப்படுகிறாரா அல்லது அவரை காப்பாற்ற நினைக்கிறாரா என்று சந்தேகப்படும் அளவிற்கு தமிழக முதல்வர் மௌனம் காக்கிறார்.

    பெண்களுக்காக பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்போம் என்று பேசும் கனிமொழி அவர்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கட்சியை வலியுறுத்தி இருக்க வேண்டாமா? பெண்மையை பழித்தவனை கண்டிக்காமல், தண்டிக்காமல் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, சம்பந்தமில்லாத கனிமொழி வருத்தம் தெரிவிக்கிறார், வார்த்தைகளால் மான பங்கம் செய்துவிட்டு அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் மன்னிப்பு கேட்காமல் இருக்கும் அந்த நபரை தண்டிக்க வேண்டாமா?

    இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

    கருங்கலில் பிறந்த காரணத்தால் கன்யாகுமரி கனிமவளங்கள் எல்லாம் தன்னுடைய சொந்த சொத்தாக நினைப்பவர் மனோதங்கராஜ். அரசின் உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு கன்யாகுமரியின் கனிம வளங்களை கொள்ளை அடித்து வரும் அமைச்சர் அவர்கள் பாஜகவுக்கு என்ன தகுதி என்று கேட்பது வியப்பூட்டுகிறது?

    பேதைப் பெண்களை போகப் பொருளாக்க நினைக்கும் திமுகவின் கல்குவாரி கொள்ளையர்கள் எல்லாம், பெண்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேசும்போது, ஒரு பச்சைத் தமிழர், கண்ணியமான காவல் பணியில் உயர் பொறுப்பில் இருந்தவர், உண்மையான தேச பக்தர், ஆகச்சிறந்த சிந்தனையாளர், வருங்காலத் தமிழகத்தின் ஒளிவிளக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், எங்கள் அன்புச் சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கும், பாஜகவுக்கும், பெண்களுக்காகப் போராடவும், பரிந்து பேசவும் ஆயிரம் தகுதிகள் உண்டு.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....