Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: விட்டுச்சென்ற பெற்றோர்கள்.! தத்தெடுத்த மருத்துவமனை.!

    ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: விட்டுச்சென்ற பெற்றோர்கள்.! தத்தெடுத்த மருத்துவமனை.!

    சேலம் : ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, குடும்ப வறுமையை காரணம் காட்டி பெட்ரா பிள்ளைகளை மருத்துமனையிலேயே பெற்றோர்கள் விட்டுச்சென்ற சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    குழந்தை என்பதே ஒரு வரம்தான்..அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம் …அதை கொண்டாடாத குடும்பங்களே இருக்காது…அந்த அளவிற்கு பெண் குழந்தையை மகாலட்சுமி…அது நம் வீட்டிற்கு கிடைத்த வரம் என்றெல்லாம் ஒவ்வொருவரும் பேசி கேட்டிருப்போம்…அதை நம் வாழ்வில் உணரவும் செய்திருப்போம்.

    ஆனால் இந்த உணர்வுகளை முழுமையாக அனுபவிக்க முடியாத எத்தனையோ தம்பதியினர் குழந்தை பேற்றிற்காக இன்னும் வரமாய் வரம் கெடக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்மணி கிடைக்காத பிள்ளை பேற்றினை பெற்று,அதை 10 மாதம் கருவில் சுமந்து ஒரே பிரசவத்தில் மூன்று அழகான பெண் தேவதைகளை பிரசவித்துவிட்டு, குடும்ப வறுமையை காரணம் காட்டி, மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தைகளை தனியே தவிக்கவிட்டுவிட்டு சென்றுள்ள நிகழ்வு அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இதையும் படிங்க: காரோடு மூழ்கடித்து ‘துடிக்க துடிக்க கொலையா’ ? பாஜக MLA-வின் தம்பி மகன் சடலமாக மீட்பு

    சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அந்த பெண் 20 ஆம் தேதி அன்று ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

    எடை குறைவாக பிறந்த அந்த மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையின் காரணமாக தங்களால் பராமரிக்க முடியாது.எனவே இந்த குழந்தைகளை மருத்துவமனையிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று பெற்றெடுத்த தாயும்,தந்தையும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் கூறியுள்ளனர்.

    ஆனால் மருத்துவமனை முதல்வர் வள்ளியோ உடனடியாக குழந்தைகளை பெறமறுத்ததுடன், தாய்-தந்தை இருவரிடமும் குழந்தைகளின் அருமை குறித்து விளக்கி தன்னால் முடிந்த அளவிற்கு அறிவுரையும் வழங்கி உள்ளார். இருந்தும் பெற்றோர்கள் இருவரும் 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்று தங்கள் குடும்ப சூழ்நிலையை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லவே,பிறகு வேறு வழியின்று குழந்தைகளை விட்டுச்செல்ல மருத்துவமனை நிர்வாகமும் சம்மதித்துள்ளது.

    இதனையடுத்து எடை குறைவாக பிறந்த குழந்தைகள் என்பதால் அந்த மூன்று சிசுக்களையும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருதத்துவமனையிலேயே வைத்து மருத்துவர்கள் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது 3 பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் குழந்தைகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு ,அந்த குழந்தைகளை பத்திரமாக பராமரித்து பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி,குழந்தைகள் 3 பேரையும் ,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.

    தற்போது அந்த குழந்தைகள் மூவரும் சேலம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் .

    இதையும் படிங்க: இது ‘திராவிட மாடல்’இல்ல, ‘துரோக மாடல்’! ஆவின் பால் விலை உயர்வால் ஓபிஎஸ் ஆவேசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....