Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அலையில் அடித்துச் செல்லப்பட்ட மீனவ வீடுகள்; ஒரே நாளில் அதிரடி முடிவெடுத்த ரங்கசாமி

    அலையில் அடித்துச் செல்லப்பட்ட மீனவ வீடுகள்; ஒரே நாளில் அதிரடி முடிவெடுத்த ரங்கசாமி

    புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 5 கோடி ரூபாய்க்கு கடற்கரையோரத்தில் கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், புயலுக்கு அப்புறம் அந்த பணிகள் தொடங்கும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் விரையில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து மிதமான மழை பெய்து வருவது மட்டுமல்லாம், கடல் கொந்தளிப்புடன் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பழைய துறைமுகத்தில் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்ட போது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அந்தப் பகுதியில் கடலை சரித்துக் கொண்டிருந்ததை கண்ட அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களை பத்திரமாக இங்கிருந்து கலைந்து செல்ல சொல்லுங்கள் என்றும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட மீனவ கிராம பகுதிகளான வம்பாகீரப்பாளையம், குருசுகுப்பம், பிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளை நேரில் சென்று அப்பகுதியில் புயல் காரணமாக ஆறு வீடுகள் இடிந்து விழுந்தன அந்த வீடுகளையும் பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பால் வீடுகள் விழும் நிலையில் உள்ளது. உடனடியாக பாதிப்பை தடுக்கும் வகையில் 5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. புயல் முடிந்தவுடன் அந்த பணிகள் தொடங்கும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட கடலோரக் மீனவ கிராம மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், மீனா கிராம பஞ்சாயத்தினர் உடன் இருந்தனர். அப்போது மீனவ மக்கள் தங்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு முறையிட்டனர்.

    புதுச்சேரியை புயலின் ஆட்டம் ஆரம்பம்! அவஸ்த்தைக்குள்ளான 5 குடும்பங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....