Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

    நாளை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தீவிர புயலாக இருந்த மாண்டஸ் தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்தப் புயல் இன்று நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    மேலும் இன்று இரவு11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதனால் வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு,காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

    புயல் கரையை கடக்கும் போது எங்கெல்லாம் பேருந்துகள் இயங்காது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....