Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்லாக்டவுன்..இருவர் மட்டுமுள்ள ஒரு வீடு..அதில் ஒருவருக்கு பேய் பிடித்தால்?... - வெளியானது கனெக்ட் டிரெய்லர்!

    லாக்டவுன்..இருவர் மட்டுமுள்ள ஒரு வீடு..அதில் ஒருவருக்கு பேய் பிடித்தால்?… – வெளியானது கனெக்ட் டிரெய்லர்!

    நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் கனெக்ட் திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

    மாயா, கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர், அஸ்வின் சரவணன். இவரின் இயக்கத்தில் வெளிவந்த இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்து, அஸ்வின் இயக்கத்தில் எந்த திரைப்படம் வெளியாகும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்து வந்தது. 

    அப்போதுதான், நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகவுள்ள ஹாரர் திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், படத்திற்கு ‘கனெக்ட்’ என்று பெயரிடப்பட்டது. இத்திரைப்படத்தில், சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

    மாயா திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அஸ்வின் மற்றும் நயன்தாரா இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஹாரர் கான்செப்டில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

    ‘லாக்டவுன் சமயத்தில், ஒரு வீட்டில் இருவர் மட்டுமே இருக்கும்போது இருவரில் ஒருவருக்கு பேய் பிடித்தால் என்னவாகும், என்ன நிகழும்?’ என்பதை கதைக்களமாக கொண்டுதான் கனெக்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. தற்சமயம் வெளிவந்துள்ள டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    மேலும், 95 நிமிட கால அளவைக் கொண்டுள்ள கனெக்ட் திரைப்படம் இடைவேளை ஏதுமின்றி திரையரங்குகளில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இத்திரைப்படம், கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று இந்திய அணி வீரர்கள் இல்லை; வெளிவந்த அதிரடி அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....