Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅவசியமின்றி வெளியே வர வேண்டாம்! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

    அவசியமின்றி வெளியே வர வேண்டாம்! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

    அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    தீவிர புயலாக இருந்த மாண்டஸ் தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்தப் புயல் இன்று நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    இந்நிலையில், அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

    பொதுமக்கள் கவனத்திற்கு..

    மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறுப் போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    பொதுமக்களின் நலனுக்காக:

    அவசியத் தேவைகளுக்கானப் பயணம் மேற்கொள்பவர்கள் இருச் சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் குடை உபயோகிப்பதைத் தவிர்த்து மழை அங்கி அணியலாம்.

    மேலும் மழைக்காக ஒதுங்க நேரிட்டால் மரங்கள் பழுதடைந்தக் கட்டிடங்கள் விளம்பர போர்டுகள் மின்மாற்றிகள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.

    இவ்வாறு, அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் நேரம்.. பேருந்துகள் இயங்காது; மெட்ரோ ரயில் இயங்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....