Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்எலான் மஸ்க் மீது பதியும் வழக்குகள்; படுக்கை அறையாக மாறிய அலுவலகம்..

    எலான் மஸ்க் மீது பதியும் வழக்குகள்; படுக்கை அறையாக மாறிய அலுவலகம்..

    ட்விட்டர் நிறுவனத்தின் மீதும், நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் மீதும் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  

    எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

    இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், ப்ளு டிக், ஊழியர்கள் நீக்கம் என எலான் மஸ்க்கின் அதிரடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

    இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் எலான் மஸ்க் மீதும், ட்விட்டர் மீதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் சட்டத்துக்கு மாறாக படுக்கை அறைகளை உருவாக்கி, ஊழியர்கள் அலுவலகத்திலேயே தங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறி ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 44வது செயலாண்மைக் குழு கூட்டம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....