Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுயல் கரையை கடக்கும் நேரம்.. பேருந்துகள் இயங்காது; மெட்ரோ ரயில் இயங்குமா?

    புயல் கரையை கடக்கும் நேரம்.. பேருந்துகள் இயங்காது; மெட்ரோ ரயில் இயங்குமா?

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில்  மெட்ரோ சேவை வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் தற்போது புயலாக வலுவிழந்தது. இந்தப் புயல் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

    மாண்டஸ் புயலானது இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனவும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே, மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்று இரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    புயல் கரையை கடக்கும் நேரத்திலும் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எப்போதும் போல், அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூன்று இந்திய அணி வீரர்கள் இல்லை; வெளிவந்த அதிரடி அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....