Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்...

    இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தோனேசியாவில் இன்று கிழக்கு ஜாவா மாகாணத்தின் சரியான்ஜங்-ஹிலிர் பகுதிக்கு 14 கி.மீ. தொலைவில், 123.7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் அது 5.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் அந்நாட்டு தலைநகர் ஜகார்தா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. இதுமட்டுமல்லாமல், இந்தோனேசியாவில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க உத்தரவு; தலைமை செயலாளர் இறையன்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....