Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க உத்தரவு; தலைமை செயலாளர் இறையன்பு

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க உத்தரவு; தலைமை செயலாளர் இறையன்பு

    மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் மாண்டஸ் புயல் தொடர்பாக திடிர் ஆய்வு மேற்கொண்டார் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு காணொளி வாயிலாக அறிவுறித்தியுள்ளார்.

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுபாட்டு மைய்யத்தில்
    மாண்டஸ் புயல் எதிரொலியாக தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ள நிலையில் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்.

    பின்னர் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை தீவிர படுத்த உத்தரவிட்டார். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அறிவுரை வழங்கினார்.

    மேலும் புயல் கரையை கடக்கின்ற நேரத்தில் முழு வீச்சில் தடுப்புப் பணிகளையும் அனைத்து அரசு இயந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
    இந்நிகழ்வில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமை செயலாளர் இறையன்பு உடன் இருந்தனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம்; புயலால் சேதம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....