Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம்; புயலால் சேதம்..

    மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம்; புயலால் சேதம்..

    மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் அமைக்கப்பட்டிருந்த மரப்பாலம் மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ளது. 

    வங்கக்‌ கடலில்‌ உருவான மாண்டஸ்‌ புயல்‌ பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தீவிர புயலிலிருந்து தற்போது புயலாக மாண்டஸ் மாறியுள்ளது.

    மேலும், இந்த புயலானது இன்று நள்ளிரவு முதல்‌ நாளை அதிகாலைக்குள்‌ காரைக்கால்‌ – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம்‌ அருகே கரையைக்‌ கடக்கும்‌ எனவும்‌ வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது. 

    இந்த மாண்டஸ் புயலால், நேற்று முதல்‌ கடல்‌ சீற்றத்துடன்‌ காணப்படுகிறது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தில் பலகைகள் உடைந்து சேதமடைந்துள்ளது. 

    bridge

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்‌ கீழ்‌ மெரினாவில்‌ ரூ.1 கோடியே 14 லட்சம்‌ செலவில்‌ மரத்தால்‌ அமைக்கப்பட்ட நாட்டின்‌ முதல்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை கடந்த நவம்பர்‌ 27 ஆம்‌ தேதி திறக்கப்பட்டது. 

    தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தில் அனைவரும் நடந்துச் செல்வது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    துணிவு அப்டேட்; இன்று மாலை வெளியாகவுள்ள முதல் பாடல்..ரசிகர்களே ரெடியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....