Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாண்டஸ் புயல் எதிரொலி; விமான பயணிகளுக்கு அவஸ்தயை ஏற்படுத்திய அறிவிப்பு

    மாண்டஸ் புயல் எதிரொலி; விமான பயணிகளுக்கு அவஸ்தயை ஏற்படுத்திய அறிவிப்பு

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    வங்கக் கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    அதிகாலை சென்னையில் இருந்து கொழும்பு செல்லக்கூடிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை தூத்துக்குடி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு கடப்பாவிற்கு செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், இன்று இரவு 9.15 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், இலங்கையில் இருந்து அதிகாலை 04.30 மணிக்கு சென்னைக்கு வரவிருந்த ஏர் இந்தியா விமானமும், தூத்துக்குடியில் இருந்து இன்று காலை 09.35 வரவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்  விமானமும், மாலை 5.50 மணிக்கு கடப்பாவில் இருந்து சென்னை வரும் இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குஜராத் தேர்தல்; வெற்றிப்பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் மனைவி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....