Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்குஜராத் தேர்தல்; வெற்றிப்பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் மனைவி..

    குஜராத் தேர்தல்; வெற்றிப்பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் மனைவி..

    குஜராத் தேர்தலில்  இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

    குஜராத் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துள்ளன. முன்னதாக, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட, அதில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா அவரது மனைவி ரிவாபாவிற்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மோடியும் குஜராத் பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டனர். மறுமுனையில் காங்கிரஸ் கட்சிகளும், ஆம் ஆத்மி கட்சிகளும் பிரசாரங்களில் ஈடுபட்னர். 

    இதன்பிறகு தேர்தல் நடைபெற்று, தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது. 17 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ரிவாபாவுக்கு 88,119 வாக்குகள் கிடைத்தன. ஆம் ஆத்மி வேட்பாளர் கர்சான் கர்மூருக்கு 34,818 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் 53,301 வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா அமோக வெற்றி பெற்றார்.

    இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திர சிங் ஜடேஜா மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு 23,088 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ரிவாபா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....