Saturday, March 23, 2024
மேலும்
    Homeவானிலைஎதிர்பார்த்தது நடக்குது! மாண்டஸ் புயல் குறித்து வெதர்மெனின் லேட்டஸ்ட் அப்டேட்!

    எதிர்பார்த்தது நடக்குது! மாண்டஸ் புயல் குறித்து வெதர்மெனின் லேட்டஸ்ட் அப்டேட்!

    வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

    மாண்டஸ் புயல் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்பார்த்ததைப் போல் மாண்டஸ் தீவிர புயலில் இருந்து புயலாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளதாவது;  

    மாண்டஸ் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் வலுவிழந்துள்ளது. இப்புயல் சென்னைக்கு தெற்கே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கடக்கும். அப்படி கடக்கும்போது, 70 கி.மீ முதல் 100 கி.மீ வேகம் வரை சில இடங்களில் காற்று வீசக்கூடும். 

    மேலும், மாண்டஸ் புயலால் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருக்காது. அதேசமயம், புதுச்சேரிக்கு மேலே உள்ள மாவட்டங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, சென்னையில் பதிவான மழையின் அளவையும் அவர் வெளியிட்டுள்ளார். 

    • திருவிக நகர் – 82 மி.மீ
    • அண்ணா நகர் மேற்கு – 79 மி.மீ
    • கோடம்பாக்கம் 77 மி.மீ
    • திருவற்றியூர் – 75 மி.மீ
    • தேனாம்பேட்டை – 74 மி.மீ
    • ஐஸ் ஹவுஸ் – 72 மி.மீ
    • நந்தனம் – 71 மி.மீ
    • கொளத்தூர் – 70 மி.மீ
    • தண்டையார் பேட்டை – 69 மி.மீ
    • மாதவரம் – 69 மி.மீ
    • நுங்கம்பாக்கம் – 68 மி.மீ
    • ராஜ அண்ணாமலைபுரம் – 68 மி.மீ
    • மீனம்பாக்கம் – 68 மி.மீ
    • கத்தி வாக்கம் – 65 மி.மீ
    • பெரம்பூர் – 63 மி.மீ
    • அமைந்தகரை – 62 மி.மீ
    • மணலி – 62 மி.மீ
    • புழல் – 61 மி.மீ
    • நியூ மணலி டவுண் – 60 மி.மீ
    • மெரீனா (டிஜிபி அலுவலகம்) – 56 மி.மீ
    • முகலிவாக்கம் – 56 மி.மீ
    • அடையார் – 54 மி.மீ
    • பெருங்குடி – 53 மி.மீ
    • எம்ஜிஆர் நகர் – 51 மி.மீ
    • அயனாவரம் – 50 மி.மீ
    • ஆலந்தூர் – 50 மி.மீ
    • பாலவாக்கம் – 50 மி.மீ
    • தரமணி – 50 மி.மீ
    • வானகரம் – 50 மி.மீ

    பொன்னியின் செல்வன்; இரண்டாம் பாகம் குறித்து வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....