Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் புயலின் ஆட்டம் ஆரம்பம்! அவஸ்த்தைக்குள்ளான 5 குடும்பங்கள்

    புதுச்சேரியில் புயலின் ஆட்டம் ஆரம்பம்! அவஸ்த்தைக்குள்ளான 5 குடும்பங்கள்

    புதுச்சேரியில் ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு ,இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    மேலும் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், அதே போல் வலைகளையும் பத்திரமாக வைக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் புதுச்சேரி அடுத்த மீனவ கிராமமான பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பால் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் தொடர்ந்து வீடுகள் விழுந்து வருகிறது. அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பயம் கலந்த பீதியில் உள்ளனர்.

    ஏற்கனவே தென்னை மரங்கள் வீடுகள் இடிந்த நிலையில் தற்போது கடல் சீற்றத்தில் மேலும் ஐந்து வீடுகள் இடிந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வீடுகள் விழுந்துள்ளது தொடர்ந்து மண் அரிப்பின் காரணமாக அப்பகுதியில் வீடுகள் விழுந்து கொண்டே வருகிறது.

     

    மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....