Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாண்டஸ் புயலில் இருந்து தப்பிக்க உஷார் நிலையில் மீனவர்கள்; என்ன செய்தார்கள் தெரியுமா?

    மாண்டஸ் புயலில் இருந்து தப்பிக்க உஷார் நிலையில் மீனவர்கள்; என்ன செய்தார்கள் தெரியுமா?

    புதுச்சேரியை அடுத்த நல்லவார்டு மற்றும் பொது குப்பம் மீனவர்கள் தங்கள் படகு மற்றும் வலைகளை 100 மீட்டர் தூரம் கொண்டு சென்று தென்னை மரத்தில் கட்டி வைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    மேலும் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், அதே போல் வலைகளையும் பத்திரமாக வைக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    அதனை அடுத்து புதுச்சேரி துறைமுக பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் உள்ள 16 மீனவர் கிராமங்களில் உள்ள சிறிய படகுகள் அந்தந்த பகுதிகளில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக நல்லவாடு மற்றும் புதுகுப்பம் மீனவ பகுதியில் இருக்கும் மீனவர்களின் படகுகளை 100 மீட்டர் அளவில் எடுத்து சென்று தென்னை மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதேபோல் வலைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர்.

    இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....