Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைஇன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்

    இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்

    தீவிர புயலான மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    வங்க கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் தற்போது தீவிரமடைந்து நகர்ந்து வருகிறது. இது வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வட தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே தீவிர புயலான மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மாண்டஸ் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், “வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். தீவிரப்புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரைக்காலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

    தீவிர புயலாக உள்ள மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். புயல் இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு இந்திய அணியின் பிளான் என்ன? – பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....