Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மழை சேதத்தை சமாளிக்க பேரிடர் மேலாண்மை குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். புதுவை, காரைக்காலில் தாழ்வான பகுதிகளை பார்வையிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை; புதுச்சேரி, காரைக்காலில் இரு தினங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....