Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி கடற்கரை பகுதியில் கடல்நீர் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

    தூத்துக்குடி கடற்கரை பகுதியில் கடல்நீர் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

    தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட மாவட்டமாக இருக்கிறது. இங்கு பல மீனவ கிராமங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக நேற்றும், இன்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அதே சமயம் கடலில் 3 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து வருகின்றன. புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலை பகுத்தியில் சுமார் 30 அடி நீளம் கடல் உள்வாங்கி இருக்கிறது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டு பகுதிகளும் வெளியே தெரிந்தன. கடல் உள் வாங்கியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். 

    புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

    பொன்னியின் செல்வன்; இரண்டாம் பாகம் குறித்து வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....