Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை: இன்று முதல் தொடங்குகிறது, காலிறுதி..

    கால்பந்து உலகக் கோப்பை: இன்று முதல் தொடங்குகிறது, காலிறுதி..

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இன்று காலிறுதிச் சுற்றுகள் தொடங்குகின்றன. 

    ஃபிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டியானது கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. 

    இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்தும், இன்று காலிறுதிச் சுற்றுகள் தொடங்கவுள்ளன. இந்த காலிறுதிச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி, பிரேசில், குரோசியா, அர்ஜென்டீனா, நெதர்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

    இன்று தொடங்கவுள்ள காலிறுதிச் சுற்றில் இரண்டு ஆட்டங்களும், நாளை இரண்டு ஆட்டங்களும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 13, 14 தேதிகளில் அரையிறுதிச் சுற்றும் டிசம்பர் 18 அன்று இறுதிச் சுற்றும் நடைபெறவுள்ளன. இதனிடையே, டிசம்பர் 17 அன்று 3-வது இடத்துக்கான ஆட்டம் நடைபெறுகிறது.

    டிசம்பர் 9

    பிரேசில் – குரோசியா (இரவு 8.30 மணி)

    அர்ஜென்டீனா – நெதர்லாந்து (நள்ளிரவு 12.30 மணி)

    டிசம்பர் 10

    போர்ச்சுகல் – மொராக்கோ (இரவு 8.30 மணி) 

    பிரான்ஸ் – இங்கிலாந்து (நள்ளிரவு 12.30 மணி)

    குஜராத் தேர்தல்; வெற்றிப்பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் மனைவி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....