Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மான்டஸ் புயல் எதிரொலி; புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை

    மான்டஸ் புயல் எதிரொலி; புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை

    புயல் காரணமாகவும் கடலின் சீற்றம் அதிகரித்து வருவதால் புதுச்சேரி கடற்கரையில் வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெளியேறுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி கடற்கரைக்கு வந்தவர்களை வெளியேற்றினார்.

    மான்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதாலும், பலத்த காற்று வீசப்பட்டு வருவதாலும் இரண்டு தினங்களுக்கு புதுச்சேரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சுற்றுலாப் பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டது.

    இதனை அறியாத ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரையில் எந்த பயம் இன்றி வந்ததால் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடற்கரை இரண்டு நாட்கள் யாரும் வரக்கூடாது என்றும், புயல் காரணமாக அனைவரும் பாதுகாப்பாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினர்.

    மேலும் கடற்கரை சாலை முழுவதும் ரோந்து சென்று கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் திரும்பி செல்லுமாறு போலிசார் அறிவுறுத்தி வெளியேற்றினர்.

    அலையில் அடித்துச் செல்லப்பட்ட மீனவ வீடுகள்; ஒரே நாளில் அதிரடி முடிவெடுத்த ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....