Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'பூமிக்கே வரப்போகும் நிலா ' 1 கோடி பேர் தங்கும் வசதியுடன் துபாயில் அடுத்த ...

    ‘பூமிக்கே வரப்போகும் நிலா ‘ 1 கோடி பேர் தங்கும் வசதியுடன் துபாயில் அடுத்த பிரம்மாண்டம் !

    நிலவு போன்ற கட்டிடத்துக்கு தயாராகிறது துபாய் என தகவல் வெளிவந்துள்ளது. 

    உலக மக்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் அவ்வபோது துபாய் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு திட்டம் துபாயில் அமலாக உள்ளது. அதற்கு பெயர் ‘மூன் துபாய்’ திட்டம். ஆம், துபாயில் உள்ள கனடா கட்டடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட்டை கட்டவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. 

    இந்த நிறுவனம் அதற்கான வடிவத்தை வடிவமைத்து உள்ளனர். சுமார் 735 அடி அளவில் 48 மாதங்களில் இது கட்டப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பூமியிலேயே விண்வெளியில் இருப்பது போல் உணரும் அனுபவத்தைத் இது தரும் என்றும் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

    இந்த ‘மூன் துபாய்’ திட்டத்தின் மூலம், விருந்தோம்பல், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளில் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    மேலும், இது வெற்றிகரமான நவீன கால சுற்றுலா திட்டம் என்றும், இந்த பிராண்ட் விழிப்புணர்வு மூலம் துபாய்க்கான வருடாந்திர சுற்றுலா வருகைகள் இரட்டிப்பாகும் என்றும் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸின் நிறுவனர் சாண்ட்ரா ஜி மேத்யூஸ் கூறியிருக்கிறார்.

    இந்த மூன் துபாய் கட்டிடத்தின் முழு வேலையையும் முடிக்க 5 பில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதனால் ஆண்டுக்கு 1.8 பில்லியன் வரை வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.1800 கோடி செலவில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் – அறக்கட்டளை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....