Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி...யார் இவர்?

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி…யார் இவர்?

    சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்றார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், மத்திய – சட்டத்துறை அமைச்சகத்தால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றுக் கொண்டார். இவரின் பதவிக்காலமும் வருகின்ற செப்டம்பர் 21-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீதிபதி எம்.துரைசாமி இளநிலை வணிகவியல் படிப்பை முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். 1987-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். 

    இவர் 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட எம்.துரைசாமி, 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்பு – சக நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் வாழ்த்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....