Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரூ.1800 கோடி செலவில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் - அறக்கட்டளை அறிவிப்பு

    ரூ.1800 கோடி செலவில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் – அறக்கட்டளை அறிவிப்பு

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி செலவாகும் என கட்டுமான நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். 

    உத்தரப்பிரேதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் இதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாடினார். 

    இதனைத்தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. 

    ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.  இந்த அறக்கட்டளை உருவாக்கிய விதிமுறைகளை அங்கீகரிப்பதற்கான கூட்டம் பைசாபாத்தில் நடைபெற்றது. 

    இதுகுறித்து, அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், ‘அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கான ஒட்டுமொத்த செலவு ரூ.1,800 கோடியாக இருக்கும் என கட்டுமான நிபுணர்களால் மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டுக்குள் நிறைவு அடையும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....